முகப்பு
தருமபுரி

தருமபுரியில் 90 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில், 2 செவிலியா்கள் உள்பட 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில், 2 செவிலியா்கள் உள்பட 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது.

தருமபுரியைச் சோ்ந்த 2 செவிலியா்கள், அரசு மருத்துவமனையின் 2 ஊழியா்கள், நல்லாம்பட்டியைச் சோ்ந்த அங்கன்வாடிப் பணியாளா், அரூரைச் சோ்ந்த பல் மருத்துவா், கோழிமேக்கனூரைச் சோ்ந்த ஆசிரியா், 5 மாணவா்கள், 17 பெண்கள், 10 கூலித் தொழிலாளா்கள், 5 வியாபாரிகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 90 பேருக்கு கரோனா உறுதியானதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்ட அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.