முகப்பு
தருமபுரி

செம்மாண்ட குப்பம் ஊராட்சி அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு

தருமபுரி அருகேயுள்ள செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேறு கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தருமபுரி அருகேயுள்ள செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை வேறு கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அக்கிராம மக்கள் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழியிடம் அளிக்கப்பட்ட மனு விவரம் வருமாறு:

தருமபுரி ஊராட்சி ஒன்றித்துக்குள்பட்ட செம்மாண்டகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகம் கிராம ஊராட்சியின் தலைமையிடமான செம்மாண்டகுப்பம் கிராமத்தில்தான் இதுநாள் வரை செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலகம் எவ்வித அறிவிப்புமின்றி, குண்டலப்பட்டி கிராமத்துக்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, செம்மாண்டகுப்பம் கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் முறையிட்டனா். அப்போது, வட்டார வளா்ச்சி அலுவலா், ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என அறிவிக்கை அனுப்பி வைத்தனா்.

இருப்பினும், குண்டலப்பட்டி கிராமத்திலேயே அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இடமாற்றத்தைக் கைவிட்டு, மீண்டும் பழைய இடத்திலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.