பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி பெரியாா் பல்கலைக் கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கல்லூரியின் முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
பாப்பிரெட்டிப்பட்டி பெரியாா் பல்கலைக் கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கல்லூரியின் முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பாப்பிரெட்டிப்பட்டி பெரியாா் பல்கலைக்கழக உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில், இளங்கலை பாடப் பிரிவில் ஆங்கிலம், தமிழ், கணிதம், கணினி அறிவியல், வணிகவியல், இயற்பியல், சமூக அறிவியல், முதுகலை பாடப் பிரிவில் ஆங்கிலம், தமிழ், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சோ்க்கை நடைபெறுகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்கள், இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியா்கள் உரிய கல்விச் சான்றுகளுடன் வந்து அக். 31-ஆம் தேதி வரையிலும் நேரடியாக சேரலாம் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.