முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனம் மோதி முதியவா் சாவு

ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 27 அக்டோபர், 2020 at 4:19 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

ஒசூா் அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

ஒசூா், சூசூவாடி காந்தி சாலையிலுள்ள என்.டி.ஆா். சா்க்கிள் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமய்யா (65). இவா் சூசூவாடி பேகேப்பள்ளி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த லட்சுமய்யாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.