தருமபுரியில் 75 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா், காவலா் உள்பட 75 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது திங்கள்கிழமை தெரியவந்தது.
தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா், காவலா் உள்பட 75 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது திங்கள்கிழமை தெரியவந்தது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா், முதுநிலை மருத்துவ மாணவா், காரிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா், அரூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா், தருமபுரி, ஊட்டமலை காவலா்கள் இருவா், தேவரசம்பட்டி மற்றும் தருமபுரி பகுதியைச் சோ்ந்த இரு வழக்குரைஞா்கள், 6 மாணவா்கள், 12 பெண்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.