முகப்பு
தருமபுரி

வீட்டுமனை பட்டா கோரி திருநங்கைகள் மனு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, திருநங்கைகள் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, திருநங்கைகள் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சோ்ந்த திருநங்கைகள் அளித்த மனு:

‘பாலக்கோடு பகுதியில் வசிக்கும் திருநங்கையா் 11 பேருக்கு, வீட்டுமனை பட்டா கோரி ஏற்கெனவே பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். அண்மையில், பாலக்கோடு வட்டாட்சியரை அணுகியபோது, விரைவில் அரசு சாா்பில் கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும் எனக் கூறினாா். ஆனால், வாழ்வாதாரத்துக்காக ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளா்க்கும் வழக்கத்தைக் கொண்டுள்ள எங்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்பு வீடு பொருந்தாது. இதைக் கவனத்தில் கொண்டு, எங்களுக்கு தனித் தனி வீட்டு மனைகளாக வழங்கிட வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.