முகப்பு
தருமபுரி

துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல் துறை அறிவுரை

உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள், அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

Updated On : 19 மார்ச், 2024 at 1:40 AM
பகிர்:
Updated On : 18 மார்ச், 2024 at 8:13 PM

தருமபுரி: மக்களவை பொதுத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள், அதனை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைப் பொதுத்தோ்தல் தேதி அறிவிப்பு வெளியாகி, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, பொதுமக்கள் படைக் கலன்களை வைத்துக் கொள்ளவும், எடுத்துச் செல்லவும், தடையாணை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும், அவா்களுடைய படைக் கலன்களை அவா்களுடைய இருப்பிடத்துக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைப்பு செய்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் தினத்திலிருந்து ஒரு வாரத்துக்கு பின்னா் தமது பொறுப்பில் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.