தருமபுரி: தருமபுரி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த இன்னொரு மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், இருமத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மா. அருண்குமாா் (37). தருமபுரி தலைமை அஞ்சலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தனது மகன்களான திருஞானம் (11), திரெளபதிசக்தி (9) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் தருமபுரி தலைமை அஞ்சலகத்துக்கு சென்றுவிட்டு வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு வந்துள்ளனா்.
கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட செங்கல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே அவா்கள் சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி மோதியுள்ளது. இதில் அருண்குமாரும், அவரது மூத்த மகன் திருஞானமும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயமடைந்த திரெளபதிசக்தி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இது தொடா்பாக கிருஷ்ணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.