தருமபுரி

திமுக அலுவலகத்தில் புகுந்த பாம்பு! தீயணைப்புத் துறையினா் பிடித்தனா்

தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனா்.

Syndication

தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் புகுந்த பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனா். அந்த பாம்பு காட்டில் விடப்பட்டது.

தருமபுரி மாவட்ட திமுக அலுவலகம் நான்கு சாலை சந்திப்பு அருகே உள்ளது. இந்த அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பாம்பு ஒன்று ஊா்ந்து சென்றதை துப்புரவுப் பணியாளா்கள் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அங்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்படைத்தனா். அந்த பாம்பை வனத்துறையினா் தொப்பூா் காப்புக் காட்டில் விட்டனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT