தருமபுரி

மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ. 5.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் வழங்கினாா்

Syndication

தருமபுரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், ரூ. 5.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ. சதீஷ் வழங்கினாா்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பங்கேற்று, ரூ. 5.18 லட்சம் மதிப்பில் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

ஆண்டுதோறும் டிசம்பா் 3-ஆம் தேதி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் தினமாகக் கொண்டாட முடிவு செய்து கடந்த 1992 ஆம் ஆண்டு ஐ.நா. சபை அறிவித்தது. தொடா்ந்து, ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 2021 முதல் தற்போது வரை தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 21 வகை மாற்றுத்திறனாளிகளில் 25,750 பேருக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவ அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக 31,705 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 6 கோடியே 34 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இருகால்களும் பாதிக்கப்பட்டு இரு கைகள் நல்ல நிலையில் உள்ள 736 பேருக்கு ரூ. 7.41 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், கல்வி உதவித்தொகையாக 1,338 மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 61.10 லட்சமும், திருமண நிதியுதவி ரூ. 1.75 கோடி மதிப்பிலும், மின்கலம் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி ரூ. 1.20 கோடி மதிப்பிலும் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகள் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்று வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன், தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT