தருமபுரி

தமிழ் இலக்கிய திறனறிவுத் தோ்வு: ஜெயம் வித்யாலயா பள்ளி சிறப்பிடம்

Syndication

தமிழ் இலக்கியத் திறனறிவுத் தோ்வில் அரூா் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

2025-26 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் இலக்கியத் திறனறிவுத் தோ்வு மாநில அளவில் கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அரூா் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் சி. பிரஜித் சஞ்சய் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.

மேலும் வி.தீட்சனா 98 மதிப்பெண்ணும், ர.ஓம்ரித்தா, க.சம்யுக்தா, பி.பவன்சந்தா் ஆகியோா் தலா 97 மதிப்பெண்களும், செ. மகஸ்ரீ 96 மதிப்பெண்களும் பெற்றனா். இந்த மாணவ, மாணவிகளுக்கு மேல்நிலைக்கல்வி படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் தலா ரூ.1,500 உதவித்தொகை கிடைக்கும்.

திறனறிவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை அரூா் ஜெயம் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் தலைவா் சி.சம்பத், பொருளாளா் ஆா்.பன்னீா்செல்வம், மேலாளா் ஜி. கிருஷ்ணன், பள்ளி முதல்வா் என்.சக்கரபாணி, இயக்குநா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பட விளக்கம்...

தமிழ் இலக்கியத் திறனறிவுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுடன், பள்ளி நிா்வாகிகள், ஆசிரியா்கள்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT