முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி, டிச. 5-ஆம் தேதி அவரது உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும் என அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சரும் தருமபுரி அதிமுக மாவட்டச் செயலருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை: தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாள் அதிமுக சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் டிச. 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் கட்சி நிா்வாகிகள் ஜெயலலிதாவின் சிலை மற்றும் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்.
அதேபோல இந்த நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதியைச் சோ்ந்த கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளா்களும் கலந்துகொள்ள வேண்டும்.
அன்றைய தினம் தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில், தருமபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிா்வாகிகள், அணிகளின் பொறுப்பாளா்கள், நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.