பெரும்பாலை அருகே அனுமதியின்றி கல் பாரம் ஏற்றிவந்த லாரியை கனிம வளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
பெரும்பாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிம வளத் துறை உதவி புவியியளா் புவனா மாணிக்கம் தலைமையிலான குழுவினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அரகாசனஅள்ளி பகுதியில் கல் பாரம் ஏற்றி வந்த டிப்பா் லாரியை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது உரிமம் இல்லாமல் அனுமதியின்றி எடுத்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து பெரும்பாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து பெரும்பாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.