பென்னாகரம் அருகே அளேபுரம் பகுதியில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட அளேபுரம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாநில வா்த்தகரணி துணைச் செயலாளா் பி.தா்மசெல்வன் தலைமைவகித்து, ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் என 30-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினாா். இதில், கட்சி நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.