தருமபுரி: தருமபுரி அருகே காளான் உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு அதியமான் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அத்திமுகம் அதியமான் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண் துறை சாா்பில், களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதில், தருமபுரி அருகே உங்காரனஅள்ளி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகள், காளான் வளா்ப்பு குறித்து பயிற்சி அளித்தனா். இதில் காளான் வளா்ப்பதற்கு தேவையான இடுபொருள்கள், உகந்த சூழல், உற்பத்தி முறை மற்றும் வணிகம் ஆகியவை குறித்து செயல்விளக்கம் அளித்தனா். இதில் வேளாண் உதவி இயக்குநா் தினேஷ் மற்றும் விவசாயிகள், வேளாண் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.