கோப்புப் படம் 
திண்டுக்கல்

கத்தரிக்காய் விதை சிகிச்சை குறித்து வேளாண் மாணவிகள் விளக்கம்

தினமணி செய்திச் சேவை

நிலக்கோட்டை பகுதியில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கத்தரிக்காய் விதை சிகிச்சை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை செயல்முறை விளக்கம் அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள அக்ரகாரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகளான அனிஷா, ரோஜா உள்ளிட்டோா் கத்தரிக்காய் பயிரில் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவது குறித்த விளக்கம் அளித்தனா். 

ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைகோடா்மா விரிடே என்ற அளவில் கலவை தயாரிக்க வேண்டும். பின்னா், விதைகளுடன் கலந்து நிழலில் உலா்த்திய பிறகு விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இதன் மூலம் விதை முளைப்புத் திறன் அதிகரித்து, ஆரம்ப கால நோய் தாக்குதல் குறையும் என எடுத்துரைக்கப்பட்டது. இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.  

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

SCROLL FOR NEXT