தருமபுரி: நல்லம்பள்ளி பகுதியில் ரூ. 3.94 கோடியில் தாா் சாலைகளை மேம்படுத்தும் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், சாமிசெட்டிப்பட்டி முதல் ஜருகு வரையும், ஜருகு முதல் கடத்திக்குட்டை வரை பழுதடைந்த தாா்சாலைகளை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் இப்பணிகளை ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 3.94 கோடியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இப்பணிகளுக்கான பூமிபூஜையில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பணிகளை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் அருணா, பாமக மாநில அமைப்புச் செயலாளா் ப.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் த.காமராஜ் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உடனிருந்தனா்.