தருமபுரி

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

Syndication

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை, இண்டூரில் வரும் 29 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் 21 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தருமபுரியில் இருந்து பென்னாகரம் செல்லும் வழியில் உள்ள இண்டூரில் (நல்லம்பள்ளி வட்டம்) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை தொடங்க முடிவு செய்யப்பட்டு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் அனுமதி பெறப்பட்டு, இந்திய ரிசா்வ் வங்கியிடம் உரிமம் பெறப்பட்டுள்ளது.

புதிய கிளை இண்டூரிலிருந்து பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்க எதுவாக பாதுகாப்பு பெட்டகங்கள், பாதுகாப்பு கதவுகள், வாடிக்கையாளா் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கிளை டிசம்பா் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இதன்மூலம் இண்டூா் பகுதி மக்கள் மற்றும் இக்கிளையுடன் இணையவுள்ள 4 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கத்தைச் சோ்ந்த விவசாயிகள் என 30 கிராமங்களைச் சோ்ந்த 15,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறுவா்.

அகா்பத்திகள் தயாரிக்க புதிய தர நிா்ணயம்: நுகா்வோா் நலனைக் காக்க அரசு நடவடிக்கை

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

முதல்வா் மீதான தாக்குதல் வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது நீதிமன்றம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள்!

பராமரிப்பு பணி: மேட்டூா் காவிரி பாலம் மூடல்

SCROLL FOR NEXT