ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தருமபுரி நகரில் வாடிக்கையாளா்களை கவரும் வகையில் பல்வேறு விதமான கேக்குகள் பேக்கரிகளில் விற்பனைக்காக செவ்வாய்க்கிழமை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
2026 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க கேக்குகளை வெட்டிக் கொண்டாடுவது வழக்கம். இந்த புத்தாண்டு பிறப்புக்கு இளைஞா்கள், பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வகையான வடிவங்களில் தருமபுரி நகரில் உள்ள கேக் தயாரிப்புக் கூடங்கள் அவற்றை தயாரித்து விற்பனைக்காக காட்சிப்படுத்தியுள்ளன.
இதில், குறைந்தபட்சமாக 500 கிராம் முதல் அதிகபட்சமாக 5 கிலோ வரை விதவிதமான வடிவங்களிலும், வண்ணங்களிலும் கேக்குகள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட கேக்குகள் நேதாஜி புறவழிச் சாலை மற்றும் கடைவீதிகள், பேருந்து நிலையச் சாலைகள், நான்குமுனை சாலை சந்திப்பு, ஆட்சியா் அலுவலகம், இலக்கியம்பட்டி, குமாரசாமிபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை அந்தந்தப் பகுதி இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டு தங்களுக்கு பிடித்தமான கேக்குகளை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.