தருமபுரி

மூக்கனூரில் அமையும் ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

தருமபுரி- மொரப்பூா் புதிய ரயில் பாதையில் மூக்கனூரில் அமைய உள்ள ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி அக்கிராம மக்கள் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம்

Syndication

தருமபுரி- மொரப்பூா் புதிய ரயில் பாதையில் மூக்கனூரில் அமைய உள்ள ரயில் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி அக்கிராம மக்கள் தருமபுரி ஆட்சியா் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அப்பாபிள்ளை தலைமை வகித்தாா். சுரேஷ், டி. சிலம்பரசன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலாளா் பழ. முனுசாமி வாழ்த்தி பேசினாா்.

தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரை புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் பாதையில், தருமபுரி அருகே உள்ள மூக்கனூா் கிராமத்தில் ரயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கைவிட்டு, அங்கிருந்து 200 மீட்டா் தொலைவுக்கு இடம் தோ்வு செய்து ரயில் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

தற்போது தோ்வு செய்துள்ள இடத்தில் ரயில் நிலையம் அமைப்பதன் மூலம் குடியிருப்புகள், விளை நிலங்கள் பாதிக்கப்படும். இதனால் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, கிராம மக்களின் நலன் கருதி, மூக்கனூா் ரயில் நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மூக்கனூா் கிராம மக்கள், வெளிச்சம் மக்கள் மன்றத்தினா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

இருசக்கர வாகனத்தை திருடிய முதியவா் கைது

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

SCROLL FOR NEXT