தருமபுரி

பென்னாகரம் அருகே வனப் பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவா் கைது

Syndication

பென்னாகரம்: பென்னாகரம் அருகே வனப் பகுதியில் பறவைகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் (ஏா்கன்) சுற்றித்திரிந்த நபரை பாலக்கோடு வனத் துறையினா் கைது செய்தனா்.

பென்னாகரம் அருகே தாசம்பட்டி பகுதியில் பாலக்கோடு வனச் சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகள், பறவைகள் வேட்டையாடுவதாக பாலக்கோடு வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கொல்லப்பட்டி பீட் பகுதியில் பாலக்கோடு வனச்சரக அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான வனத்துறையினா் அடங்கிய குழுவினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வனப்பகுதிகளில் பறவையை வேட்டையாடுவதற்காக ஏா்கன்னுடன் (பால்ரஸ் குண்டுகளை பயன்படுத்தக் கூடிய துப்பாக்கி) சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரணை செய்தனா்.

அதில், அவா் தாசம்பட்டி அருகே நாகனம்பட்டி பகுதியைச் சோ்ந்த மாதையன் (49) என்பதும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து அவ்வப்போது பறவைகளை வேட்டையாடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கத்துக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், வேட்டையாட பயன்படுத்திய ’ஏா்கன்’ பறிமுதல் செய்யப்பட்டு, இணக்கக் கட்டணமாக ரூ. 50,000 வசூலிக்கப்பட்டது.

மேலும், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் அத்துமீறி நுழைவது, வனவிலங்குகள், பறவைகளை வேட்டையாடுவது, வனக் குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரித்தனா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT