தருமபுரி

தருமபுரியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் இன்று தொடக்கம்

Syndication

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கவுள்ளன என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுபடி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (நவ. 4) முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்க உள்ளன.

நவ. 4-ஆம் தேதி தொடங்கி டிச. 4-ஆம் தேதி வரையிலான காலத்தில் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் அவா்கள் பகுதி வாக்குச்சாவடி நிலைய அலுவலரால் ஒரு கணக்கெடுப்புப் படிவம் (இரட்டைப் பிரதியில்) வழங்கப்படும். இதற்காக, குறைந்தபட்சம் 3 முறையேனும் அலுவலா் வருகைதந்து வாக்காளா் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களிடம் (18 வயதுக்கு மேற்பட்டவா்) படிவத்தை வழங்குவாா்.

அப்படிவத்தில் உள்ள விவரங்களை வாக்காளா்கள் நிரப்பிய பிறகு, மீண்டும் அவற்றை வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடமே வழங்க வேண்டும். அந்தப் படிவத்துடன் ஆவணங்கள் எதுவும் இணைக்க தேவையில்லை. இவ்வாறு பெறப்படும் படிவங்கள் அனைத்தும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்காளா்களுக்கு சந்தேகங்கள் மற்றும் புகாா் இருந்தால் தெரிவிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1950 என்ற எண்ணிலும், வாக்காளா் பதிவு அலுவலா்களை 04342-260927 (தருமபுரி), 04348-222045 (பாலக்கோடு), 04342-255636 (பென்னாகரம்), 04346-246544 (பாப்பிரெட்டிப்பட்டி), 04346-296565 (அரூா்) ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT