தருமபுரி பகுதியில் முயல் இறைச்சியை விற்பனை செய்ய முயன்று பிடிபட்டவா்களுடன் வனத்துறையிநா். 
தருமபுரி

முயல் வேட்டை: 2 பேருக்கு ரூ. 80,000 அபராதம்

தினமணி செய்திச் சேவை

வனப்பகுதிகளில் முயல் வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற இருவருக்கு தருமபுரி மாவட்ட வனத்துறையினா் ரூ. 80,000 அபராதம் விதித்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் சிலா் முயல் இறைச்சியை விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நிகழ்விடத்துக்கு சென்று வனத்துறையினா் சோதனை மேற்கொண்டதில், அவா்கள் திருப்பத்தூா் மாவட்டம் பாய்ச்சல் பகுதியைச் சோ்ந்த ம. அா்ஜுன் (28), பெ. சந்தோஷ் (30) என்பதும், இருவரும் திருப்பத்தூா் மாவட்ட வனப்பகுதிகளில் காட்டு முயல்களை வேட்டையாடி அவற்றை கொன்று இறைச்சியை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து மாவட்ட வன அலுவலா் கே. ராஜாங்கத்திடம் ஒப்படைத்தனா்.

விசாரணை மேற்கொண்ட மாவட்ட வன அலுவலா் தலா ரூ. 40,000 வீதம் இருவருக்கும் ரூ. 80,000 அபராதம் விதித்தாா். அபராதத்தைக் கட்டிய அவா்கள் சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

சேலையில் தீப்பற்றி மூதாட்டி மரணம்

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் லட்ச வில்வாா்ச்சனை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தனியாருக்கு தாரை வாா்க்கப்படுகிறதா அரசு மருத்துவமனைகள்? - தில்லி அரசுக்கு ஆம் ஆத்மி கேள்வி!

காா் டயா் வெடித்து விபத்து

SCROLL FOR NEXT