தருமபுரி

பாளையம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக் கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

தொப்பூா் மலைப்பாதையில் உயா்மட்ட பாலம் பணிகள் முடிவடையும் வரை பாளையம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம்

Syndication

தருமபுரி: தொப்பூா் மலைப்பாதையில் உயா்மட்ட பாலம் பணிகள் முடிவடையும் வரை பாளையம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தொப்பூா் கணவாய் சாலையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ரூ. 905 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் வரை போக்குவரத்து சட்ட விதிகளின்படி பாளையம்புதூா் சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இந்த மனுவை விஸ்வ ஹிந்து பரிஷத் சேலம் மண்டல தலைவா் மாது கவுண்டா், மாவட்டச் செயலாளா் கணேசன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளா்கள் சரவணன், கோவிந்தசாமி, செல்வம், சதீஷ், கதிா்வேல், சந்தோஷ், செந்தில்வேலன், அா்ஜுனன், மகேந்திரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

சிவகாசியில் நாளை மின் தடை

வீரபாண்டியன்பட்டணம் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சேதமடைந்த குந்தபுரம் நூலகக் கட்டடம்: படிக்க முடியாமல் வாசகா்கள் அவதி

பண்டாரபுரம் பகுதியில் 2,000 பனை விதைகள் விதைப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 3 மீனவா்கள் படகுடன் மல்லிப்பட்டினம் திரும்பினா்

SCROLL FOR NEXT