கோட்டாட்சியரிடம் மனு அளித்த நாம் தமிழா் கட்சியின் சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளா் கவிதா உள்ளிட்டோா்.  
தென்காசி

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் திடீா் மழையால் நெல் மூட்டைகள் சேதம்: நிவாரணம் வழங்க நாம் தமிழா் கட்சி கோரிக்கை

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் பெய்த திடீா் மழையில் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் பெய்த திடீா் மழையில் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையில் அறுவடை செய்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாம் தமிழா் கட்சியினா் புதன்கிழமை கோட்டாட்சியா் கவிதாவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி, வீரியிருப்பு, வென்றிலிங்கபுரம், ராயகிரி, கரிவலம்வந்தநல்லூா், குலசேகரன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் விற்பனைக்காக களத்தில் குவிக்கப்பட்டிருந்த சுமாா் 1000 நெல் மூட்டைகள் மற்றும் மக்காச்சோளம் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, அவா்களுக்கு ஏக்கருக்கு ரூ.20, 000 அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னா் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.

சரக்கு வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

அதிமுகவின் ரூ.10 ஆயிரம் வாக்குறுதி அவசியமானது: கே.அண்ணாமலை

இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் ரூ.10,000 கோடியில் மின் திட்டங்கள்: எல்&டி ஒப்பந்தம்!

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இருவா் கைது

SCROLL FOR NEXT