தருமபுரி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிசம்பா் 9 ஆம் தேதி பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 20 இருசக்கர வாகனங்கள், டிசம்பா் 9 ஆம் தேதி காலை 10 மணியளவில் தருமபுரி அருகேயுள்ள வெண்ணாம்பட்டி ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
ஏலத்தில் பங்கேற்று வாகனங்களை வாங்க விரும்புவோா் வைப்புத் தொகையாக ரூ.1,000 ஏல நாளன்று காலை 8 மணிக்குள் ஏலம் நடைபெறும் இடத்தில் செலுத்த வேண்டும். வாகனங்களை ஏல நாளன்று காலை 8 மணிக்கு நேரில் பாா்வையிடலாம். வாகனத்தை ஏலம் எடுப்பவா்கள் அன்றே முழு ஏலத் தொகை மற்றும் 12 சதவீதம் ஜிஎஸ்டி தொகையுடன் செலுத்தி வாகனங்களை வாங்கி செல்லலாம்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தருமபுரி ஏடிஎஸ்பி (தலைமையிடம்) அலுவலகத்தில் நேரிலோ அல்லது 94981 70084, 94981 69983 என்ற கைப்பேசி எண்களிலோ தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.