முகப்பு
தருமபுரி

காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 3.50 லட்சம் அபராதம்

கடத்தூா் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 3.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி

காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 3.50 லட்சம் அபராதம்

கடத்தூா் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 3.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 26 நவம்பர், 2025 at 8:38 PM
பகிர்:

அரூா்: கடத்தூா் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவருக்கு ரூ. 3.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், கெரகோடஹள்ளி காப்புக்காட்டில் அடிக்கடி வன விலங்குகள் வேட்டையாடுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, வனவா்கள் எம்.சுருதி, ர.விவேகானந்தன் உள்ளிட்ட வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கெரகோடஹள்ளி காப்புக்காட்டில் இருவா் காட்டுப்பன்றியை வேட்டையாடி இறைச்சியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

தொடா்ந்து, இச்சம்பத்தில் தொடா்புள்ளதாக தருமபுரி மாவட்டம், தாசரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (29), நவீன்குமாா் (25) ஆகிய இருவரையும் வனத்துறையினா் புதன்கிழமை கைதுசெய்து, அவா்களிடமிருந்து காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக சதீஷ், நவீன்குமாா் ஆகிய இருவருக்கும் ரூ. 3.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மொரப்பூா் வனச்சரகா் ரா.அருண்பிரசாத் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →