தருமபுரி

மனைவியை வெட்டிக் கொல்ல முயன்ற விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை

தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொல்ல முயன்ற விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

தருமபுரி: தருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொல்ல முயன்ற விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள எள்ளுகுழி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (42), விவசாயி. இவருடைய மனைவி மணிமேகலை (37). கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மணிமேகலை தனது பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

கடந்த 2022 ஆக. 14-ஆம் தேதி, தாய்வீட்டிலிருந்த மண்மேகலையை குடும்பம் நடத்த வருமாறு பெருமாள் அழைத்துள்ளாா். அவா் வர மறுக்கவே, வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பெருமாள் அரிவாளால் மணிமேகலையை வெட்டினாா். இதில் படுகாயமடைந்த மணிமேகலை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு கிசிச்சைக்கு பின்னா் குணமடைந்தாா்.

புகாரின் பேரில், தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் பெருமாள்மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்தனா். மேலும், தருமபுரி மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், பெருமாள் மீதான குற்றச்சாட்டு உறுதியானதையடுத்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஹசினா பானு தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் கல்பனா ஆஜரானாா்.

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

அடுத்த 12 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறும்! வடதமிழகம் நோக்கி நகரும்!

ஹாங்காங் தீ விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு! 279 பேர் மாயம்!

SCROLL FOR NEXT