முகப்பு
உலகம்

டிரம்ப்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை!

டிரம்ப்பை கொல்ல முயன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 6 பிப்ரவரி 2026, 9:04 am IST
டொனால்ட் டிரம்ப் | ரியான் வெஸ்லி ரூத்
பகிர்:

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டொனால்ட் டிரம்ப்பைக் கொலை செய்ய முயற்சித்தவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2024 செப்டம்பர் 15 ஆம் தேதி, புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டுக்கு அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து துப்பாக்கியுடன் அங்கிருந்து ஓடியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Advertisement

விசாரணையில் அவரது பெயர் ரியான் வெஸ்லி ரூத் (வயது 59) என்பது தெரியவந்தது. அவருக்கு எதிராக சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருத்தல், கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு வெஸ்லி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அவருக்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டன. அதில், வெஸ்லிக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

summary

Life sentence for the person who tried to kill Trump!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments