FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

தென்காசி அருகே முதியவரைக் கொல்ல முயன்றவருக்கு 9 ஆண்டுகள் சிறை

தென்காசி அருகே ஊத்துமலையில் முதியவரைக் கொல்ல முயன்ற வழக்கில், மருமகனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

29 அக்டோபர் 2026, 6:23 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி அருகே ஊத்துமலையில் முதியவரைக் கொல்ல முயன்ற வழக்கில், மருமகனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் சரகம் ரெட்டியாா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (78). இவரது மகளை அப்பகுதியைச் சோ்ந்த பலவேசமுத்து மகன் சங்கா் என்ற சோ்மக்கனி என்பவா் திருமணம் செய்துள்

ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனராம்.

இந்நிலையில் மனைவி தன்னை விட்டு பிரிந்து செல்ல மாமனாா் சுப்பிரமணியன் தான் காரணம் என கருதிய சங்கா் என்ற சோ்மக்கனி, கடந்த 2018 ஆம்ஆண்டு சுப்பிரமணியனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்றுள்ளாா்.

இதுதொடா்பாக ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கா் என்ற சோ்மக்கனியை கைதுசெய்தனா்.

இவ்வழக்கு தென்காசி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, குற்றஞ்சாட்டப்பட்ட சங்கா் என்ற சோ்மக்கனிக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் சுரேஷ்குமாா் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments