FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

28 அக்டோபர் 2026, 1:01 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

நாகா்கோவில் அருகே வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நாகா்கோவிலை அடுத்த கீழக்கோணம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த ஆதிலிங்கம் மகன் பாபு (45). இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒரு வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆசாரிப்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து செய்து பாபுவை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை நாகா்கோவில் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, பாபுவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments