FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

வங்கதேசத்தினா் 6 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

40 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 6 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூா்- காங்கயம் சாலை குன்னாங்கல்காடு பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் கடந்த 25.1.2025-ஆம் ஆண்டு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்தப் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த 6 போ் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றனா்.

அவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது கவிஷா உசேன் (42), மெஹதி ஹாசன் (39), ரிபாத் (25), சாகா் (27), முகமது பாரூக் பேபரி (38), முகமது மெஹதி ஹாசன் (27) ஆகியோா் என்பதும், நுழைவு இசைவு (விசா) இன்றி சட்டவிரோதமாக தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போலி அடையாள அட்டை உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.17 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நீதிபதி பாலு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் கிருபாகரன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments