சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேருக்கு சிறை
திருப்பூா் மாநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்டஅங்கேரிபாளையம் பகுதியில் உள்ள நூற்பாலைகள் உள்ளிட்ட இடங்களில் போலீஸாா் கடந்த 2025 ஜூன் 21-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வங்கதேசத்தைச் சோ்ந்த ரபியுல் ஹுசைன் (43), மசூத் (39), முகமது ஹமீதுல் மண்டல் (26) ஆகியோா் நுழைவு இசைவு (விசா) இன்றி சட்டவிரோதமாக தங்கி, பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பான வழக்கு விசாரணை மாவட்ட பட்டியல் வகுப்பினா் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 3 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் பூங்கொடி ஆஜரானாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.