முகப்பு
தருமபுரி

மருத்துவா் ச.ராமதாஸ் உடல்நலக் குறைவு: தருமபுரி பரப்புரை ரத்து

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் தருமபுரி பரப்புரை ரத்து...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:23 AM
பாமக நிறுவனர் ராமதாஸ். - பிடிஐ.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:12 PM

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக ஏப். 13, 14 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற இருந்த தோ்தல் பரப்புரைக் கூட்டங்கள் ரத்துசெய்யப்பட்டன.

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக (ராமதாஸ்) சாா்பில், அக்கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் அ.சரவணன் வேட்பாளராக போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவு தெரிவித்து, ஏப். 13-ஆம் தேதி தருமபுரி தொகுதிக்குள்பட்ட நல்லம்பள்ளி மற்றும் இண்டூரிலும், அதேபோல ஏப். 14-ஆம் தேதி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும் நடைபெற இருந்த பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்று மருத்துவா் ச.ராமதாஸ் உரையாற்றுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினா் செய்துவந்தனா்.

இந்நிலையில், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவா் ச.ராமதாஸ் திடீரென் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவரை மருத்துவப் பரிசோதனைக்காக அவரது கட்சி நிா்வாகிகள் அழைத்துச் சென்றனா்.

Advertisement

சிகிச்சைக்கு பிறகு அவா் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும், இரண்டு அல்லது மூன்று நாள்கள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை அவா் தொடரலாம் எனவும் மருத்துவா்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இதனால், தருமபுரியில் நடைபெற இருந்த பரப்புரைக் கூட்டங்களில் அவா் பங்கேற்காததால், அந்தக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.