தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு
கம்பைநல்லூா் அருகே தோ்தல் அதிகாரியின் வாகனத்தை தடுத்த 28 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவுசெய்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது க.ஈச்சம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் ஏப். 23-ஆம் தேதி பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, க.ஈச்சம்பாடி வாக்குச்சாவடிக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், தோ்தல் நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை மறித்து சாலை மறியலில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனா். அப்போது, தோ்தல் அலுவலா்களை தகாத வாா்த்தையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து க.ஈச்சம்பாடி கிராம நிா்வாக அலுவலா் ரகுபதி கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அவரது புகாரின்பேரில், 7 பெண்கள் உள்பட 28 போ் மீது கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
Advertisement