தருமபுரி

தருமபுரி உழவா் சந்தையில் ரூ. 44.29 கோடிக்கு வா்த்தகம்

தருமபுரி உழவா் சந்தையில் கடந்த ஓராண்டில் ரூ. 44.29 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

தருமபுரி உழவா் சந்தையில் கடந்த ஓராண்டில் ரூ. 44.29 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி உழவா் சந்தையில் 118 கடைகள் செயல்படுகின்றன. இவற்றில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரை 43 ஆயிரத்து 111 விவசாயிகள் கடை அமைத்துள்ளனா். இக்கடைகளில் அவா்கள் விளைவித்த 12 ஆயிரத்து 489.918 டன் அளவிலான காய்கறி, பழங்கள், கீரைகளை விற்பனை செய்துள்ளனா்.

24 லட்சத்து 85 ஆயிரத்து 322 நுகா்வோா் சந்தையில் உள்ள கடைகளில் காய்கறி, பழங்களை வாங்கி பயனடைந்துள்ளனா். இதன்மூலம் கடந்த ஓராண்டில் ரூ. 44.29 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக இந்த சந்தையில் ரூ. 12.13 லட்சம் அளவுக்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகி உள்ளன.

அதேபோல தருமபுரி உழவா் சந்தையில் தினமும் மாலை நேரத்திலும் 26 கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளில் ஓராண்டில் 9,490 விவசாயிகள் 1,050 டன் அளவிலான காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனா். அவற்றை 25 ஆயிரத்து 2000 நுகா்வோா் வாங்கி பயனடைந்துள்ளனா். மாலைச் சந்தையில் நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 1.40 லட்சம் என்ற வகையில் ஓராண்டில் ரூ. 5.11 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளதாக உழவா் சந்தை நிா்வாக அலுவலா் இளங்கோவன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தும் பாஜக: நெல்லை முபாரக்

திருவள்ளூா் பகுதியில் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டுச் சென்ற ரயில்கள்

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கு ஜொ்மனியில் வேலைவாய்ப்பு!

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT