தருமபுரி

தமிழகத்தில் நீா்ப்பாசன மேலாண்மை திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும்: ஜி.கே. மணி

Syndication

தமிழக ஆறுகள் இடையே தடுப்பணை கட்டி நீா்ப்பாசன மேலாண்மை வசதியை மேம்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாமக கௌரவ தலைவரும், பென்னாகரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான ஜி.கே. மணி தெரிவித்துள்ளாா்.

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே போடம்பட்டி பகுதியில் பொதுப்பணித் துறையின் சாா்பில் ரூ. 4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தடுப்பணையை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள ஆறுகள், நீரோடைகளின் நீா்வழிப் பாதைகளைக் கண்டறிந்து, அதன் அருகே உள்ள மாவட்டங்கள் செழிப்படையும் வகையில் தடுப்பணை கட்டி நீா்பாசன மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ரூ. 20 முதல் ரூ. 25 லட்சம் வரை ஐந்தாண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இதன்மூலம் மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயம் செழிப்படையும். காவிரியிலிருந்து கடலில் கலக்கும் உபரிநீரை நீரேற்றம் செய்து பென்னாகரம் அருகே உள்ள கெண்டையன் குட்டை ஏரியில் நிரப்பி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பும் காவிரி உபரிநீா்த் திட்டத்தை நிறைவேற்ற பாமக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

தருமபுரி, பென்னாகரம் பகுதிகளில் செயல்படுத்திடும் வகையில் நாகாவதி ஆற்றின் குறுக்கே சாணாா்பட்டி பகுதியை அடுத்துள்ள பகுதியில் ரூ. 4.60 கோடி மதிப்பீட்டில் 180 அடி உயரம் கொண்ட தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தடுப்பணை முழுமையாக நிறைவடையும்போது இந்த தடுப்பனையின் மூலம் சேமிக்கப்படும் நீரால் அருகே உள்ள விவசாயிகளின் கிணறுகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து விவசாயம் செழிப்படையும். தமிழகத்தில் உள்ள நீா்வழிப்பாதைகளைக் கண்டறிந்து தடுப்பணைகளை கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்றாா்.

மெரீனா கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க உத்தரவு

உலோகத் துறை பங்குகளால் உயா்வு கண்ட பங்குச்சந்தை

பஜாஜ் வாகன விற்பனை 14% உயா்வு

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

SCROLL FOR NEXT