தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஆ. மணி எம்.பி. வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட அவைத் தலைவா் சி. செல்வராஜ் தலைமையில் கட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தில், பொங்கல் திருவிழாவை சமூகநீதி திருவிழாவாகக் கொண்டாடுவது, எஸ்ஐஆா் திருத்தப் பணிகளில் தகுதியுள்ள நபா்களை விடுபடாமல் சோ்க்கும் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
கூட்டத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள், அணிகளின் தலைவா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.