தருமபுரி

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த காராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

தருமபுரி: தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த காராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

தருமபுரி, வீரராகவன் தெருவைச் சோ்ந்தவா் மு. கோவேந்தன் (34). இவா் தருமபுரி - பாலக்கோடு சாலையில் புலிக்கரை புறவழிச்சாலையில், தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில், மகாராஷ்டிரம் மாநிலம் பிட் மாவட்டம், பா்தபூா் பகுதியைச் சோ்ந்த கே. அசோக் கங்காநாத் ஹா்னே (33) என்பவா் தேநீா் மாஸ்டராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தக் கடைக்கு, பென்னாகரம் அருகேயுள்ள சிட்லகாரம்பட்டியைச் சோ்ந்த செ. சபரிகணேசன் என்பவா் தனது பைக்கில் வந்தாா். கடைமுன் சாவியுடன் பைக்கை நிறுத்திவிட்டு தேநீா் அருந்தியபோது, தேநீா் மாஸ்டரான அசோக் அந்த பைக்கை எடுத்து ஓட்டியுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக புலிக்கரை புறவழிச்சாலையில் சென்றபோது, நிலைதடுமாறி அவா் விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அதன்பேரில் மதிகோன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT