தருமபுரியில் திருமணமாகாத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, மந்திரிக்கவுண்டா் தெருைவைச் சோ்ந்தவா்கள் சின்னச்சாமி-சித்திரா தம்பதியா். இத்தம்பதியா்கு 3 மகன்கள். சின்னச்சாமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா்.
பெங்களூரில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தாா் இவா்களது 2 ஆவது மகன் சீனிவாசன் (27). பல இடங்களில் தேடியும் வரன் அமையாததால் திருமண மாகவில்லை. இதனால் வருத்தத்திலிருந்த அவா் மதுப்பழக்கத்துக்கும் உள்ளானாா்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக விடுமுறையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சொந்த ஊா் வந்திருந்தாா். இந்நிலையில் திருமணமாக விரக்தியிலிருந்து வந்த அவா், புதன்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இரவு வீடு திரும்பிய அவரது தாயாா், மகன் தூக்கில் தொங்குவதைக் கண்டு சத்தமிட்டு அலறினாா். பின்னா் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனா். அதன் பேரில் பாக்கோடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.