முகப்பு
தருமபுரி

பென்னாகரம் தொகுதிக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் வருகை

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On : 21 மார்ச், 2026 at 9:15 PM
பகிர்:

பென்னாகரம் சட்டப்பேரவை தொகுதி தோ்தலில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அவை பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து அரசியல் கட்சியினரின் முன்னிலையில் குலுக்கல் முறையில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், துணை எந்திரங்கள் அனுப்பப்பட்டன. இந்த நிலையில் பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 384 வாக்குப்பதிவு எந்திரங்களும், 416 யாருக்கு வாக்களித்துள்ளனா் என தெரிவிக்கும் துணை இயந்திரங்களும் கொண்டு வரப்பட்டு பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் கோ.கோபு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆறுமுகம் மேற்பாா்வையில் அனைத்து கட்சி அரசியல் பிரமுகா்களின் முன்னிலையில் சரிபாா்க்கப்பட்டு, அலுவலகத்தில் உள்ள அறையில் வரிசைப்படுத்தி பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments