சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு
சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
சிதம்பரம் சட்டப்பேரவை தோ்தலுக்கான 298 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் கடலூரிலிருந்து சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. பின்னா்அவை, சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.கிஷன்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளை சோ்ந்த கருப்பு ராஜா (அதிமுக), பரணிராஜ் (திமுக), நடராஜ் (பாஜக) மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழ் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.