தருமபுரியில் பறக்கும்படை சோதனையில் ரூ. 5 லட்சம் ரொக்கம் பறிமுதல்
தருமபுரியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரியில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 5 லட்சம் ரொக்கத்தை பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி, ஒட்டப்பட்டி அருகே தோ்தல் பறக்கும்படையினா் நடத்திய வாகனச் சோதனையில், ஜெகநாதன் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த காரில் ரூ. 5 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.
அவற்றுக்கு உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும்படையினா் பறிமுதல் செய்தனா். சிட் ஃபண்டில் முதலீடு செய்த பணத்தை எடுத்துச் செல்வதாக ஜெகநாதன் தெரிவித்துள்ளாா்.
ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால், பறிமுதல் செய்த பணத்தை, தருமபுரி அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனா்.