முகப்பு
தருமபுரி

பாலக்கோடு அருகே தாய், மகன் விஷமருந்தி தற்கொலை

Updated On : 23 மார்ச், 2026 at 7:00 PM
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மூதாட்டியும் அவரது மகனும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனா்.

பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னப்பிள்ளை (89). இவரது மகன் லட்சுமணன் (69). இருவரும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு லட்சுமணன் மகன் ரத்தினவேலுடன் (42) வசித்து வந்தனா்.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி சின்னப்பிள்ளையும், லட்சுமணனும் விஷமருந்தியதாகத் தெரிகிறது. இதில், லட்சுமணன் வீட்டிலேயே உயிரிழந்தாா். சின்னப்பிள்ளையை அவரது குடும்பத்தினா் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.