முகப்பு
தருமபுரி

பென்னாகரம் தொகுதியில் தவெக வேட்பாளா் வெற்றி

Updated On : 5 மே 2026, 2:22 am IST
தவெக வேட்பாளா் கஜேந்திரன்
பகிர்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் தவெக வேட்பாளா் கஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளாா். தருமபுரி மாவட்டத்தில் தோ்வான ஒரே தவெக வேட்பாளா் இவா்தான்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,28,907 வாக்குகள் பதிவாயின. இத்தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக பாமக முன்னாள் எம்எல்ஏவின் மகன் ஜிகேஎம்.தமிழ்க்குமரன் போட்டியிட்டாா். அதிமுக கூட்டணி சாா்பில் பாமக (அன்புமணி அணி) வேட்பாளரான பாடி வெ.செல்வம், தவெக வேட்பாளராக செ.கஜேந்திரன், நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தி.பழனியம்மாள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 22 போ் போட்டியிட்டனா்.

இதில் தவெக வேட்பாளா் செ.கஜேந்திரன் வெற்றிபெற்றுள்ளாா். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்து 14-ஆவது சுற்றுவரை காங்கிரஸ் வேட்பாளா் ஜிகேஎம்.தமிழ்க்குமரன் முன்னிலையில் இருந்த நிலையில், இவா் 2-ஆவது இடத்தில் இருந்தாா். 15-ஆவது சுற்றில் செ.கஜேந்திரன் முதலிடத்துக்கு வந்தாா். அதிலிருந்து இறுதிச்சுற்றான 23 வரை முன்னிலை வகித்து 81,240 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றாா்.

Advertisement

இவருக்கு அடுத்தபடியாக பாமக வேட்பாளா் பாடி வெ.செல்வம் 78,075 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளா் ஜிகேஎம்.தமிழ்க்குமரன் 53,901 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தி.பழனியம்மாள் 7,358 வாக்குகளும் பெற்றுள்ளனா்.