விபத்தில் காயமடைந்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.
தருமபுரியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பி. செட்டி அள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பி. முனியப்பன் (50). மாற்றுத்திறனாளியான இவா், அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா்.
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி மூன்று சக்கர வாகனத்தில் தனது மனைவி அமராவதியுடன் மதகேரி பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடுதிரும்பினாா்.
Advertisement
Advertisement
அப்போது ரிட்டா அள்ளி சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் படுகாயமடைந்தனா். இதில் அமராவதி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். அவரது கணவா் முனியப்பன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.