தருமபுரி

70 ஆண்டு கனவுத் திட்டம் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?

கிருஷ்ணகிரி,பிப்.21: கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கனவுத் திட்டமான கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரயில் போக்குவரத்துத் திட்டம், வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்று இப்பகுதி மக்கள் மிகு

ஆா்.ராதாகிருஷ்ணணன்

கிருஷ்ணகிரி,பிப்.21: கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 70 ஆண்டு கால கனவுத் திட்டமான கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரயில் போக்குவரத்துத் திட்டம், வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்று இப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்தில் கிருஷ்ணகிரியிலிருந்து திருப்பத்தூருக்கு ரயில்வே பாதையும், போக்குவரத்தும் இருந்தது. 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் போக்குவரத்து கிருஷ்ணகிரியில் தொடங்கி கந்திகுப்பம், ஒரப்பம், பர்கூர் ஆகிய 4 ரயில் நிலையங்களில் நின்று திருப்பத்தூர் சென்றடைந்தது. மேலும் அங்கிருந்து ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லலாம்.

இந்த ரயில் காரணம் ஏதுமின்றி 1942-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரியில் ரயில்வே அலுவலகமாக பயன்படுத்திய கட்டடங்கள் இன்றும் சாட்சியாக உள்ளன. இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், மாவட்டத் தலைநகராக கிருஷ்ணகிரி இருந்தும் ரயில் போக்குவரத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

÷நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து மீண்டும் ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஜோலார்பேட்டை வரை தொடங்க வேண்டும் என்று கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக இம் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திலேயே கிரானைட் தொழிலில் முக்கியப் பகுதியாக கிருஷ்ணகிரி விளங்குகிறது. மேலும், ஒசூர் பகுதியில் காய்கனிகள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மிகப்பெரிய தொழிற்சாலைகளும் உள்ளன. கிரானைட், காய்கனிகள், தொழிற்சாலைக்கான மூலப்பொருள்கள் மற்றும் உற்பத்தி பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யவும், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்னை செல்ல இம்மாவட்ட மக்கள் பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதனால், ரயில் போக்குவரத்து உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வலுப்பெற்றுள்ளது.

1997 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் திருப்பத்தூரிலிருந்து பர்கூர்,கிருஷ்ணகிரி,சூளகிரி மற்றும் ஒசூர் வரை 101 கி.மீட்டர் ரயில் பாதை அமைப்பதற்காக ரயில்வே துறை ஆய்வு செய்தது. மீண்டும் 2008-ல் ஒரு முறை ஆய்வு செய்த ரயில்வே துறை ரூ.558 கோடி செலவாகும் என்ற திட்ட மதிப்பீட்டு அறிக்கையை ரயில்வே போர்டுக்கு அளித்தது. ஆனால், இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

÷இது குறித்து பேருந்து மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவரும், மின் வாரிய ஒய்வூதியர் சங்கச் செயலருமான டி.சந்திரசேகரன் கூறியது:

÷திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி, சூளகிரி வழியாக ஒசூர் வரை ரயில்வேத்துறை ஆய்வு செய்து, தயாரிக்கப்பட்ட அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இம்மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான இத் திட்டத்தை நிறைவேற்ற பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், இது எங்களுக்கு கனவுத் திட்டமாகவே உள்ளது. எனவே, வரும் மத்திய ரயில்வே பட்ஜெட்டில் கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை ரயில் போக்குவரத்து திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

÷இக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த இரு தினங்களுக்கு முன் பெங்களூர் வந்த ரயில்வே இணை அமைச்சர் முனியப்பாவிடம் கோரிக்கை மனுவும் எங்கள் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT