தருமபுரி

ஏரியில் மண் அள்ள அனுமதி வேண்டும்: கீரைப்பட்டி விவசாயிகள் கோரிக்கை

DIN

அரூர் கீரைப்பட்டி புது ஏரியில் வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரியிலிருந்து மண் அள்ள அனுமதி கோரி, அரூர் கோட்டாட்சியர் அலுவலகம், பொதுப் பணித் துறையிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லாததால், கீரைப்பட்டி, செல்வசமுத்திரம், கௌப்பாறை பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏரியில் மண் அள்ள முயன்றனர். தகவலறிந்து அங்குச் சென்ற அரூர் வட்டாட்சியர் அ.செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஆ.சிவஞானம், கிராம நிர்வாக அலுவலர் வே.வெங்கடேசன் ஆகியோர் ஓரிரு நாள்களில் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து மண் அள்ள அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறியதையடுத்து, விவசாயிகள் மண் அள்ளுவதை கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT