தருமபுரி

தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாள்: மணிமண்டபத்தில் அஞ்சலி

விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாளையொட்டி,  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள அவரது மணிமண்டபத்தில்

DIN

விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு நாளையொட்டி,  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பில் மாநில உயர் கல்வித் துறை  அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடம்,  தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ளது.  தமிழ்நாடு அரசு சார்பில் இங்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது 92-ஆவது நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு சார்பில் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மலரஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் (பொ) அ. சங்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி, கோட்டாட்சியர் ராமமூர்த்தி, செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் மு. பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமூக நல்லிணக்க மேடை
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினரைக் கொண்ட சமூக நல்லிணக்க மேடை சார்பில் தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு பாப்பாரப்பட்டி மணிமண்டபத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் பொ.மு. நந்தன் தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி. ஆனந்தன், எம். மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஏ. குமார், மனித உரிமைக் கட்சியின் மாநிலத் தலைவர் பி. துரைராஜ், தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் செந்தில்ராஜா, முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் சி. ராஜசேகரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கவிஞர் ரவீந்திரபாரதி, கவிஞர் நவகவி, பேராசிரியர் சீனிவாசன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுநேத்ரா பவாருடன் என்சிபி தலைவர்கள் சந்திப்பு!

தேசியவாத காங்கிரஸை இணைக்க அஜித் பவார் விரும்பினாரா? - சரத் பவார் பதில்!

234 தொகுதிகளிலும் திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் நாளை முதல் பரப்புரை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வரப்போவதில்லை” - முதல்வர் மு . க. ஸ்டாலின்!

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

SCROLL FOR NEXT