தருமபுரி

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

தினமணி

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 பகுஜன் சமாஜ் கட்சியின் ஒன்றியச் செயற்குழுக் கூட்டம் மாவட்டப் பொதுச் செயலர் ஏ.கார்த்திக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 தீர்த்தமலை கோயில் பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். தீர்த்தமலை பேருந்து நிலைய வளாகத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அரூர் } கூடலூர் வரையிலும் இயக்கப்படும் அரசு நகர் பேருந்து தடம் எண் 22 }ஐ தீர்த்தமலை வரையிலும் நீட்டிப்பு செய்ய வேண்டும். அரூரில் இருந்து சித்தேரி, சிட்லிங், கத்திரிப்பட்டி மலைப் பகுதிகளுக்கு கூடுதல் அரசு நகர் பேருந்துகளை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், மாவட்டத் தலைவர் சி.சிவானந்தம், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் ஏ.வாசுதேவன், துணைத் தலைவர்கள் என்.சரவணன், கே.எம்.முருகன், தொகுதித் தலைவர் டி.செல்வா, மாவட்டப் பொருளாளர் பி.கோபி, மாவட்ட அலுவலகச் செயலர் ஜி.நேரு, பாராளுமன்றத் தொகுதி அமைப்பாளர் கே.ஆதிமூலம், மாவட்ட மகளிரணித் தலைவர் எம்.மல்லிகா, மாணவரணி மாவட்டத் தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT